சூர்யா வெளியிடும் ’சில்லுக் கருப்பட்டி’ படத்தின் டிரெயிலர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 18, 2019 05:35 PM
சமுத்திரக்கனி, சுனைனா மற்றும் பலர் நடித்துள்ள சில்லுக் கருப்பட்டி திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ‘பூவரசம் பீப்பீ’ படத்தை இயக்கிய ஹலிதா சமீன் இப்படத்தை இயக்கி உள்ளார்.

நகரத்தில் நடக்கும் 4 வித்தியாசமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் லீலா சாம்சன், சாரா அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். பிரதீப் குமார் இசையமைக்கும் இந்த படத்தை டிவைன் புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சூர்யா வெளியிடும் ’சில்லுக் கருப்பட்டி’ படத்தின் டிரெயிலர் இதோ வீடியோ
Tags : Sillu Karupatti, Suriya, Samuthirakani