சூர்யா வெளியிடும் 'சில்லுக்கருப்பட்டி' படம் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 17, 2019 11:05 PM
சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'சில்லுக்கருப்பட்டி'. இந்த படத்தை 'பூவரசன் பீப்பி' பட இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார்.

4 மாறுபட்ட காதல் கதை கொண்ட இந்த படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய்கார்த்திக் கண்ணன், யாமின் என 4 பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிரதீப் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
டிவைன் புரொடக்சன் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகிற 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Tags : Sillu Karuppatti, Samuthirakani, Pradeep Kumar, Suriya