'Boys-அ ICU-க்கு அனுப்பும் பெண் தேவை..' - பார்த்திபனிடம் Photo காண்பித்து பிரபல நடிகர் காமெடி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 28, 2019 02:41 PM
‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை தொடர்ந்து பார்த்திபன் உருவாக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்திற்கான காஸ்டிங் காலிற்கு நடிகர் சதீஷ் வாய்ப்பு கேட்டு புகைப்படம் பகிர்ந்துள்ளார்.

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்துள்ளார். திரைப்படம் முழுவதும் ஒரே கதாபாத்திரமே தோன்றினாலும், மக்களுக்கு சலிப்புத்தட்டாமல் சிறப்பான படைப்பை பார்த்திபன் கொடுத்திருப்பதாக கருத்துக்கள் நிலவுகின்றன.
இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், அடுத்தப்படத்துக்கான காஸ்டிங் கால் குறித்து பதிவிட்டிருந்தார். அவரது பதிவியில், “வணக்கம்! அடுத்தது பற்றி நிறைய ஓடுகிறது மனதில்,அதில் ஒரு ஸ்கிரிப்டுக்கு Fitness freak-ஆன 25 வயது பெண் (சிரித்தால்... சில பசங்களையாவது சீரியஸாக்கி ICU- க்கு அனுப்பக்கூடிய) நடித்து அனுபவமுள்ளவர் தேவை” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நக்கலாக பதிலளித்திருந்த நடிகர் சதீஷ், தமிழ்ப்படம் 2-வில் தான் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ‘இது ஓகே வா சார்..?’ என கேட்டுள்ளார்.
Enna sir ok va...?!? 🤓🤓 https://t.co/1SXrWY3Gtm pic.twitter.com/L9Y5gWRim2
— Sathish (@actorsathish) September 28, 2019