''பொண்ணு டவுட்டு தான்'' - சதீஷை கலாய்த்த சிவகார்த்திகேயன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது சமூகவலைதளங்களில் FaceApp என்கிற செயலி பிரபலமாகி வருகிறது. இந்த செயலில் நம் தற்போதைய ஃபோட்டோவை பகிர்ந்தால், நாம் சிறுவயதில் எப்படி இருந்திருப்போம், வயது முதிர்ந்த தோற்றத்தில் எப்படி இருப்போம் என்பதை ஃபோட்டோவாக காட்டுகிறது.

Sivakarthikeyan Trolls Sathish for FaceApp Photo on Twitter

மேலும் நாம் பெண் வேடத்தில் எப்படி இருப்போம் என்பதையும் தத்ரூபமாக காட்டுகிறது. இது திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகிறது.

இதனையடுத்து நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், கடைசில இந்த பொண்ணு தான் போல. என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், கடைசில மட்டும் தான் Confirm. பொண்ணு டவுட்டு தான் என்று நக்கலாக பதிலளித்துள்ளார்.