'அப்பானு ஒரு பேச்சுக்கு சொல்லலாம், காதல் அப்படி இல்ல...'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றி பெறுவோம் என்பதை காரணத்துடன் என்று மக்கள் முன்னிலையில் தெரிவித்தனர்.

Sathish Krishnan Comments about Kavin, Losliya, Kamal Haasans Bigg Boss 3

இந்நிலையில் இன்றைய தினம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில் ஃபுரூட்டி காலர் ஆஃப் தி வீக்கில் பேசிய ரசிகர் லாஸ்லியாவிடம், சேரன் உங்களிடம் உண்மையாக இருக்கிறார். நீங்களும் சேரனிடம் உண்மையாகத் தான் பழகுகிறீர்கள். ஆனால் சேரன் டிராமா பன்றாருனு சொல்லும் போது நீங்கள் ஏன் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் லாஸ்லியா திணறினார். இந்நிலையில் நடிகரும் பிரபல நடன இயக்குநருமான சதீஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  இது ஒரு கேள்வியா ? காதலும், தகப்பன் மேல் வைத்திருக்கும் நேசமும் ஒன்றல்ல.

அப்பானு ஒரு பேச்சுக்கு சொல்லலாம். காதல்னு ஒரு பேச்சுக்கு சொல்ல முடியாது. கவின் தவிர வேற யாராவது சொல்லியிருந்தால், லாஸ்லியா நிச்சயம் பதிலளித்திருப்பார் என்று தெரிவித்தார்.