'பிக்பாஸ் என்ட்ரியா ?' - அஸ்வினின் கேள்விக்கு பிரபல நடிகர் செம காமெடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். இந்த நிகழ்ச்சியின் காதல், மோதல் அத்தியாயங்கள் தான் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி வருகிறது.

Ashwin Ravichandran make fun with Sathish and Kamal's Bigg Boss 3

எல்லா சமூக பிரச்சனைகளுக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தான் உவமையாக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

அதற்கு பிரபல கிரிக்கெட்டர் அஸ்வின் ரவிச்சந்திரன், பிக்பாஸ் என்ட்ரியா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சதீஷ், இல்ல நான் ஆசிரமம் ஆரம்பிக்க போறேன் புரோ என்று தான் நித்தியானந்தா போல் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.