www.garudabazaar.com

“இந்த பணத்த எடுத்துட்டு போறவங்க போலாம்!”.. #BiggBoss வீட்டுக்குள் வந்த சரத்குமார்! பரபரப்பு ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

BiggBossTamil5

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். பின்னர் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த வாரங்களில் அக்‌ஷரா, வருண் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டனர். இதனிடையே சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகியோர் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர்கள்.

சஞ்சீவ் எலிமினேஷன், அமீர் ஃபினாலே டிக்கெட்

இதில் சஞ்சீவ் கடந்த வாரம் வெளியேறினார். அமீர் டிக்கெட் டூ கிராண்ட் ஃபினாலே என்கிற டாஸ்கில் வெற்றிபெற்று கடைசி வார நாமினேஷனில் இருந்து நேரடியாக விடுவிக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு செல்கிறார். முன்னதாக வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த ஒரு போட்டியாளர் ஜெயிப்பதற்கு உண்டான சாத்தியமில்லை என்கிற கருத்தை உங்களால் முடிந்தால் மாற்றுங்கள் என்று கமல்ஹாசன் அமீருக்கு அட்வைஸ் செய்து மோட்டிவேஷன் செய்திருந்தார்.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

மக்கள் ஜெயிக்க வைப்பார்கள்

முன்னதாக தாமரை செல்வி, தன்னை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என்று கூறிக்கொண்டிருந்தார். அதே சமயம் யார் ஜெயித்தாலும் தனக்கு சந்தோஷம் என்கிற கருத்தையும் அவர் அடிக்கடி முன்வைத்துக் கொண்டிருந்தார்.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

அண்மையில் நடந்த, மாலை அணிவித்து நாமினேஷன் செய்யும் ஒரு டாஸ்க்கில் நிரூப், சிபிக்கு மாலை அணிவித்து, “ராஜூவை நாமினேட் செய்தால், அவர் எப்படியும் மக்களால் காப்பாற்றப்படுவார், ஏனென்றால் ராஜூவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது!” என்று குறிப்பிட்டிருந்தார்.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

அதற்கும் முந்தைய எபிசோடில், சஞ்சீவ் எலிமினேஷன் செய்யப்படுவதற்கு முன்பாக பிக்பாஸ் அரங்கத்தில் இருந்த மக்கள் பாவனி, தாமரை செல்வி மற்றும் ராஜூ உள்ளிட்டோரை தங்களுடைய கருத்துக்கணிப்பின் மூலம் காப்பாற்றுவதாக கூறியதை அடுத்து அவர்கள் காப்பற்றப்படுவதாக கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்டனர்.

நடிகர் சரத்குமார் என்ட்ரி

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் திடீரென நடிகர் சரத்குமார் என்ட்ரி கொடுத்திருக்கும் பரபரப்பான புரோமோ தற்போது விஜய் டிவியில் வெளியாகியிருக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள், இதுவரை நடிகர்களைப் பொறுத்தவரை யாஷிகா ஆனந்த் உள்ளே வந்திருக்கிறார். வந்தவர் கண்ணாடி பெட்டகத்தில் நின்றுகொண்டு ஹவுஸ் மேட்சை பார்த்து பேசிவிட்டு சென்றார். யாஷிகா ஆனந்த் நடிகை மட்டுமல்லாமல், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

இதேபோல் அன்பறிவு பட புரமோஷனுக்காக நடிகர் ஹிப் ஹாப் தமிழா உள்ளிட்டோர் பிக்பாஸ் அரங்கத்தில் இருந்தபடி ஹவுஸ்மேட்சுடன் பேசினார்கள். நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் முன்பு, தாங்கள் நடித்த திரைப்படமான, ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இணையவழியில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸூடன் உரையாடினார்கள்.

Also Read: நாமினேட் செய்த பாவனியிடம் ராஜூ சொன்னது என்ன? .. ஒரு கணம் உறைந்து நின்ற பாவனி.. பரபரப்பு ப்ரோமோ!

அந்த வகையில், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த மற்றுமொரு நடிகராக சரத்குமார் திகழ்கிறார். இவரும் கண்ணாடி பெட்டகத்தில் நின்று கொண்டு ஹவுஸ்மேட்ஸூடன் பேசியிருக்கிறார். முன்னதாக சரத்குமார் தன் கையில் ஒரு பெட்டியை கொண்டு வருகிறார்.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

அந்த பெட்டி என்ன என்று அவரை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அந்த பெட்டியை திறந்து வைக்கும் சரத்குமார் அதில் மூன்று லட்சம் என்று எழுதி இருப்பதை குறிப்பிட்டு பேசத் தொடங்குகிறார்.

அவர் பேசும்பொழுது, “ஒரு போட்டின்னு வந்தா.. வெற்றி.. தோல்வி நிச்சயமா இருக்கும். 3 லட்ச ரூபாய் தான் இதுல இருக்கும்னு நெனைக்கலாம்.. இதுக்கு மேலயும் இருக்கலாம் எனக்கே தெரியாது.... இத எடுத்துக்கிட்டு நாம வீட்டுக்கு போயிடலாம்னு நெனைக்கலாம். அது உங்கள பொறுத்துதான் இருக்கு. எல்லாரும் வெற்றி பெற முடியாது. உங்கள்ல யாரோ ஒருத்தர் தான் வெற்றி பெற்று போகப் போறீங்க.  முடிவெடுப்பது ரொம்ப முக்கியம். இன்றைய ஃபெனிஃபிட்டா? அல்லது நாளைய சாதனையா? என முடிவெடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்.

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுள், யார் இந்த 3 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு இந்த போட்டியில் இருந்து வெளியேற போகிறார்கள்? யார் அவ்வாறான முடிவை எடுப்பார்கள் என்பதெல்லாம் குறித்த பேச்சுகள் ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கின்றன. இவற்றுக்கான முடிவுகள் எபிசோடுகளில் தெரியவரும்.

Also Read: யாருப்பா இவங்க? ஒரே நாளில் ஃபேமஸ் ஆன ‘கனா காணும் காலங்கள் - சீசன் 2’ டீச்சர்! தெறிக்கும் ப்ரோமோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sarathukumar viral entry BiggBossTamil5 vijay tv promo

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Sarathkumar biggboss entry, Vijay Television will find this news story useful.