RRR Others USA
www.garudabazaar.com

“பாவனியை Nominate பண்றேன்”.. அமீர் சொன்னதும் ராஜூவும் தாமரையும் செய்த சைலண்ட் Thug Life!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossTamil5: விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் முடிய சுமார் 20 நாட்களே உள்ள நிலையில், அண்மையில் நடந்த எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் ப்ராசஸில், அமீர் பாவனியை நாமினேட் செய்தார். இதற்கு ராஜூ மற்றும் தாமரை இருவரும் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தனர். இந்த ரியாக்‌ஷன் செம்ம டிரெண்டிங் ஆகியுள்ளது.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

நாமினேஷன் ப்ராசஸ்

முன்னதாக தாமரை, இந்த வாரம் யாரும் தன்னை காயப்படுத்தவில்லை. அனைவரும் தன்னை சந்தோஷமாகவே வைத்திருந்ததாகவும், அதனால் யாரையும் இம்முறை தான் நாமினேட் செய்ய விரும்பவில்லை என்றும் பேசினார். எனினும் யாரையாவது நாமினேட் செய்ய வேண்டும் என்பதால் கண்டிப்பாக பாவனியை நாமினேட் செய்வதாக தாமரை அறிவித்தார்.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

தாமரையின் நாமினேஷன்

பாவனியை நாமினேட் செய்ததற்கு தாமரை காரணத்தையும் கூறினார். அந்த காரணப்படி, பாவனி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க விரும்பாததாக தெரிகிறது, எனவே பாவனியை நாமினேட் செய்வதாக தாமரை அறிவித்தார். இதேபோல் பிரியங்காவை நிரூப் கடுமையாக பேசியது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய தாமரை, அந்த காரணத்துக்காக நிரூப்பை நாமினேட் செய்வதாக அறிவித்தார்.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

ராஜூவின் நாமினேஷன்

இவரைத் தொடர்ந்து வந்த ராஜூ, தானும் பாவனியையும் நிரூப்பையும் நாமினேட் செய்வதாக அறிவித்தார். அதில் முதலாவதாக பாவனியை நாமினேட் செய்ததற்கு காரணம் சொன்ன ராஜூ, “பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால் இருக்க வேண்டும். அப்படி நினைக்க வேண்டும். ஆனால் பாவனி அவ்வாறு இருக்கவில்லை” என்று கூறினார்.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

இதேபோல் நிரூப் உடல் அளவில் வலிமையான ஒரு போட்டியாளராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ராஜூ, எதாவது ஒன்றென்றால் அவர் அடிக்க வருகிறார், அவரை சமாளிக்க முடியவில்லை என விளையாட்டாக கூறினார். நிரூப்பும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டார்.

பாவனியை Nominate பண்றேன்

இப்படி தாமரை மற்றும் ராஜூ தங்களுடைய நாமினேஷனை சொல்லிவிட்டு சென்ற பின், அமீர் சில காரணங்களை சொல்லி பாவனியை நாமினேட் செய்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனியின் பின்னால் விளையாட்டாக காதல் என்று சொல்லி சுற்றிக்கொண்டிருந்த அமீர், பாவனியை முத்தமிட்டது கடந்த வாரங்களில் வைரலானது.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

ஃபோக்கஸ் மிஸ் ஆகுதுனு சொல்றாங்க

இந்நிலையில் தன் ஃபோக்கஸ் மிஸ் ஆவதாக மக்கள் கருதுவதாகவும், பாவனியை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டுதான், பிக்பாஸ் வீட்டுக்குள் தான் வந்ததாக மக்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டு பாவனியை அமீர், நாமினேட் செய்தார். மேலும் தன் முதன்மையான நோக்கம் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிப்பதுவுமாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாமரை - ராஜூவின் வைரல் ரியாக்‌ஷன்

அமீரின் இந்த பேச்சின்போது பாவனி, பெரிய அளவில் ரியாக்‌ஷன் இல்லாமல், எனினும் ஒரு மெல்லிய புன்னகையை ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தார். ஆனால் அமீர் பாவனியை நாமினேட் செய்ததுடன் அதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டிருந்தபோது ராஜூவும் தாமரையும் ஒருவருக்கொருவர் திரும்பிப் பார்த்து முக பாவனைகளால் வைரலான ரியாக்‌ஷன் ஒன்றை கொடுத்தனர்.

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

ஏற்கனவே ராஜூவுக்கு சைலண்டாக கலாய்க்கும் Thug Life மன்னன் என்கிற செல்ல பெயரை அவருடைய ரசிகர்கள் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "சொல்லு.. சொல்லு"... குக் வித் கோமாளி சீசன் 3.. சும்மா கலர்ஃபுல்லா வெளியான தெறி ப்ரோமோ!

after amir nominated pavani raju thamarai thug life biggboss5

People looking for online information on Amir pavani, Biggboss amir, BiggBoss Raju, BiggBoss5, Biggboss5 tamil, BiggBossTamil5, Pavani amir, Raju, Thamarai Selvi, Vijay tv will find this news story useful.