www.garudabazaar.com

Insta-வில் தன் பெயருக்கு பின்னால் இருந்த அபினய் பெயரை நீக்கிய அவரது மனைவி? #BiggBoss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Vijay Television, BiggBossTamil5: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர்.

BiggBossTamil5 Abhinay wife removes his name in insta

Abhinay:

இவர்களுள் ஒரு முக்கிய போட்டியாளராக அபினய் இணைந்தார். பழம்பெரும் நடிகர்கள் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரது பேரனான அபினய் கமல்ஹாசனின் மிகவும் நெருக்கமான வட்டத்தில் இருந்தவர். முதல்நாள் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை குறித்த முறையான அறிமுகத்துடன் அபினய்யை கமல், பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.

அபினய் - பாவனி

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் அபினய், தன் இயங்கி வந்தார். ஒரு கட்டத்தில் அபினய் மற்றும் பாவனி, இவர்கள் உறவு குறித்த பேச்சுகள் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிகரித்தன. குறிப்பாக ட்ருத் ஆர் டேர் எனும் டாஸ்க் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்தபோது ராஜூ கேட்ட கேள்வி பிரபலமானது. அவர் பாவனி மற்றும் அபினய் இருவருக்கிடையே காதல் இருக்கிறதா? என்று அபினயை நோக்கி கேட்டார்.

BiggBossTamil5 Abhinay wife removes his name in insta

 

நாமினேட் செய்த பாவனியிடம் ராஜூ சொன்னது என்ன? .. ஒரு கணம் உறைந்து நின்ற பாவனி.. பரபரப்பு ப்ரோமோ!

லவ் பண்றியா என கேட்ட ராஜூ

இதற்கு அபினய், ராஜூவிடம், “என்னடா பேசுற?” என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த அமீர், பாவனியிடம் அபினய் குறித்த, தம் விமர்சனத்தை முன் வைத்தார். அப்போது பாவனி தனக்கும் அதே கருத்து இருப்பதாக பேசினார்.

BiggBossTamil5 Abhinay wife removes his name in insta

இதனைத்தொடர்ந்து ராஜூவும் சிபியும் இதே கருத்தை, தாங்கள் இருவரும் முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் கூறியபோது பாவனி அதை மறுத்ததையும் அதன் பிறகு அதே கருத்தை ஆமோதிப்பதாக பாவனியே கூறியதையும் சுட்டிக்காட்டினர். கமல்ஹாசன் முன்னிலையி கூட பாவனி, அபினய் குறித்த தம்முடைய கருத்தும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் கருத்துடன் ஒத்துப்போவதாக தானே தெரிவித்தார்.

அபினய் மறுப்பு

எனினும் அபினய் தரப்பிலிருந்து இந்த அனைத்து விமர்சனங்களையும் கருத்துக்களையும் மறுத்ததுடன், பாவனியின் புரிதல் அப்படியாக இருந்தது பற்றி தான் அறிந்திருக்க வில்லை என்பதையும் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து நாமினேஷன் மூலமாக அபினய் எலிமினேட் செய்யப்பட்டார். எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியே வந்த போதும் பாவனியின் புரிதல் குறித்து ஆதங்கப்பட்ட அபினய், அவருக்கு வெற்றிபெற வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்திருந்தார்.

அபினய்க்கு சபோர்ட்ட் செய்த அவரது மனைவி

BiggBossTamil5 Abhinay wife removes his name in insta

முன்னதாக பாவனி, அபினை குறித்த பேச்சுக்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் எழுந்தபோது வெளியிலிருந்து அபினய்யின் மனைவி தன் கணவர் பற்றி தனக்கு தெரியும் என்று கணவரை விட்டுக்கொடுக்காமல் சப்போர்ட் செய்திருந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அபினய் அவர்களின் மனைவி தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் அபினய் என்கிற பெயரை நீக்கியது பற்றி பல்வேறு கேள்விகள் ரசிகர்களிடையே எழுத்து வருகின்றன. 

"தப்பு செஞ்சவன விட தூண்டுறவன் கெட்டவன்".. தாமரையின் வைரல் வசனம்.. சம்பவம் இருக்குமோ!

சமந்தா (Samantha), பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra)

சில ரசிகர்கள், முன்னதாக நடிகை சமந்தா இப்படி தன் கணவர் பெயரை நீக்கியது குறித்து பேசி வந்தனர். இன்னும் சில ரசிகர்கள், “பிரியங்கா சோப்ரா இப்படி தன் கணவர் பெயரை சமூக வலைதளத்திலிருந்து நீக்கினார்; ஆனால் தங்களுக்குள் எவ்வித பிரச்சனையு இல்லை என்பதையும் தெரிவித்து இருந்தார், எனவே சோசியல் மீடியாவில் ஒருவர் தங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் கணவரின் பெயரை நீக்குவதை வைத்து அவற்றுக்கு கற்பிதங்கள் கொடுத்து பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்!” என்று கூறி வருகின்றனர்.

அவசியம் இல்லை!

எனினும் இவை குறித்த விளக்கங்கள் அபினய் மற்றும் அவருடைய மனைவி தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இவற்றையும் குறிப்பிட்டு பேசிய சில ரசிகர்கள் அப்படி தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் பகிர வேண்டிய அவசியமும் இல்லை என்றும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

BiggBossTamil5 Abhinay wife removes his name in insta

People looking for online information on Abhinay, Abhinay wife, Bhavani, BiggBossTamil5 will find this news story useful.