www.garudabazaar.com

‘அப்படி சண்டை போட்டவங்களா.. இப்படி இருக்காங்க!’.. ரசிகர்களை நெகிழவைத்த கடைசி நேர காட்சிகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

VijayTelevision: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 92 நாட்கள் கடந்து ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

thamarai piyanka pavani viral pic day 92 biggboss5

BiggBossTamil5

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கிக் கொண்டே வருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில், குறிப்பிட்ட இந்த சீசனில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்கிற பரபரப்பும் ஆர்வமும் ரசிகர்களிடத்தில் சமீபகாலமாய் தொற்றிக் கொண்டுள்ளது.

BiggBoss பரபரப்பான 92வது Episode! இந்த வார Elimination-ஐ அறிவித்த கமல்ஹாசன்!

சண்டைகளும் சச்சரவுகளும்

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் வழக்கமான சீசன்களை போல இந்த சீசனிலும் சண்டைகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள், களேபரங்கள் எழுந்தன. குறிப்பாக தாமரை மற்றும் பிரியங்கா விஷயத்தில் எழுந்த சண்டைகளும் சச்சரவுகளும் பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏறக்குறைய அனைவரின் செவிகளுக்கும் எட்டின.

தாமரை - பிரியங்கா

thamarai piyanka pavani viral pic day 92 biggboss5

இதிலும் அன்மையில் முட்டை உடைத்தல் மற்றும் முட்டையை பாதுகாத்து வைத்தல் டாஸ்கில் தாமரை மற்றும் பிரியங்கா இருவரிடையே எழுந்த முரண்கள் காரணமாக ஒருவரை ஒருவர் கோபமூட்டும் பேச்சுகளை பேசிக்கொண்டும், ஆக்ரோஷமாக தள்ளிக் கொண்டும் இருந்ததை காண முடிந்தது. அதன் பின்னர் இந்த சண்டை குறித்து பேசிய கமல்ஹாசன் கோபமூட்டிய பிரியங்காவுக்கும் என்றும் பிரியங்காவை ஆக்ரோஷமாக தாமரை தள்ளிய தாமரைக்கும் அறிவுரை செய்தார்.

காப்பாற்றப்பட்டவர்கள்

அதன் பின்னர் அவர்களும் இதனை மறந்து இயல்பாக பழகத் தொடங்கினர். அதே சமயம் டாஸ்க் என்று வந்துவிட்டால் இவர்களுக்குள் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் வெறுப்பு வெளி வருவதாக இவர்கள் இருவர் மீதும் ராஜூ குற்றம் சாட்டினார். இதனிடையே இந்த வாரம் சஞ்சீவ் எலிமினேட் ஆனார். தாமரைச்செல்வி, பாவனி  மற்றும் ராஜூ உள்ளிட்டோர் பிக்பாஸ் அரங்கத்தில் இருந்த ஆடியன்ஸ் மூலம் காப்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!.. மாப்பிள்ளை யார் பாருங்க! வெளியான வைரல் Post!

வைரல் ஃபோட்டோ

எனினும் இந்த சீசன் போட்டியாளர்களிடையே டாஸ்குகளின்போது மட்டும்தான் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் மற்ற நேரங்களில் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றும் ஒரு பெயர் பொதுவாகவே இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து ஒரு புதிய புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.  அதில் தாமரை, பாவனி மற்றும் பிரியங்கா மூவரும் ஒன்றாக படுத்து ஒருவர் மீது ஒருவர் கைகளை போட்டபடி உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

thamarai piyanka pavani viral pic day 92 biggboss5

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இவர்களை அடுத்து ஆண்கள் அனைவரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே வரிசையாக அனைவரும் உறங்குவதை பார்க்கவே நெகிழ்ச்சியாக இருந்த இந்த காட்சிகள் கிட்டத்தட்ட முழு எபிசோடும் முடியும் தருணத்தில் இடம்பெற்றன. இந்த காட்சிகள் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த சீசன் போட்டியாளர்களிடையே விளையாட்டினை தாண்டி ஒரு பாசிடிவான மற்றும் மென்மையான பந்தம் உள்ளது என்றெல்லாம் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

thamarai piyanka pavani viral pic day 92 biggboss5

தொடர்புடைய இணைப்புகள்

thamarai piyanka pavani viral pic day 92 biggboss5

People looking for online information on BiggBossTamil5, Pavani, Priyanka, Thamaai Priyanka fight, Vijay Television will find this news story useful.