www.garudabazaar.com

நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.. வீடியோ வெளியிட்ட துருவ் விக்ரம்.. ரசிகர்கள் கேட்ட டவுட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஒருவருடன் நடிகர் துருவ் விக்ரம் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

dhruv vikram celebrates new year with actress banita sandhu

கதாபாத்திரத்திற்காகவும், நடிப்பிற்காகவும் பல்வேறு கடின உழைப்பை அளித்து, நம்மை அசர வைக்கக் கூடியவர் நடிகர் விக்ரம். 'சேது' ஆரம்பித்து தற்போது அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கும் மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என அனைத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். தெலுங்கில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்த 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம், தமிழில் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஜோடி செமயா இருக்கே.. மின்னல் முரளி டோவினோவுடன் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படம்

அசத்தல் நடிப்பு

இதில், துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகி இருந்தார். இதில், அவருக்கு ஜோடியாக பனிட்டா சந்து நடித்திருந்தார். இந்த படத்தில், துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மஹான்' என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

dhruv vikram celebrates new year with actress banita sandhu

துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ்

இதனைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்திலும், துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகவுள்ள படம் முடிவடைந்த பிறகு, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

dhruv vikram celebrates new year with actress banita sandhu

நடிகையுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரம், முதல் படத்தில் தனக்கு நாயாகியாக நடித்திருந்த பனிட்டா சந்துவுடன், துபாயில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருவ் விக்ரம் வெளியிட்டிருந்தார். ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து துபாயின் புர்ஜ் காலிஃபாவை பனிட்டா சந்து ரசிக்கும் பதிவு ஒன்றை துருவ் விக்ரம் வெளியிட்டுள்ளார்.

dhruv vikram celebrates new year with actress banita sandhu

ரசிகர்கள் கேள்வி

அதே போல, பனிட்டா சந்துவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், துருவ் விக்ரமுடன் புத்தாண்டைக் கொண்டாடும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இது தொடர்பான பதிவுகள், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலான நிலையில், துருவ் விக்ரம் மற்றும் பனிட்டா சந்து ஆகியோர் காதலித்து வருகிறார்களா என்ற கேள்வியையும் இணையத்தில் எழுப்பி வருகின்றனர். இது பற்றியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியாகியிருந்த 'சர்தார் உத்தம்' என்னும் திரைப்படத்தில் பனிட்டா சந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜீவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. இது வடிவேலுவோட ஹிட் வசனம் ஆச்சே.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

dhruv vikram celebrates new year with actress banita sandhu

People looking for online information on துருவ் விக்ரம், பனிட்டா சந்து, Banita Sandhu, Dhruv Vikram, New year will find this news story useful.