நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், தற்போது அவர் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’.
நடிகர் சந்தானம், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தை அடுத்து தற்போது ‘கண்டேன் காதலை’, ‘பூமராங்’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை மசாலா பிக்ஸ்க்காக ஆர் கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி ப்ரொடக்ஷனுக்காக எம்கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார்கள். இது ஆக்ஷ்சன், காமெடி மற்றும் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்கள் உள்ள பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ளது.