தேசமே கண் முழிச்சுக்கோ - அதர்வா, ஆர்ஜே பாலாஜியின் 'பூமராங்' பாடல் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அதர்வா, மேகா ஆகாஷ் நடிப்பில் கடந்த வாரம் (மார்ச் 8)  வெளியாகியுள்ள படம் 'பூமராங்'. இந்த படத்தை 'ஜெயம்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படங்களின் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜி, இந்துஜா, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Desame video song released from Atharva and Rj balaji's Boomerang

பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து தற்போது தேசமே என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, ஜிதின் ராஜ் பாடியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதர்வா தற்போது '8 தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தேசமே கண் முழிச்சுக்கோ - அதர்வா, ஆர்ஜே பாலாஜியின் 'பூமராங்' பாடல் வீடியோ இதோ! வீடியோ