Godavari news May 2nd

டிரக் டிரைவரை பாடகராக அறிமுகம் செய்த டி.இமான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தின் மூலம் கடந்த 2001ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். ‘கும்கி’ திரைப்படத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான டி.இமான் பல திறைமையான பாடகர்களை தனது இசையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Music Composer D.Imman to introduce a Malaysian tamil singing talent Thiagaraja Subramaniam who is a truck driver

அந்த வரிசையில் தற்போது மலேசியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை தனது இசையில் பாட வைத்துள்ளார். டிரக் டிரைவரான தியாகராஜா சுப்ரமணியம், இந்திய மைக்கேல் ஜாக்சனான பிரபுதேவா நடித்துள்ள திரைப்படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் டி.இமான் இசையில் வெளியான தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஏராளமான குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடித்து வரும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் முதன் முறையாக பிரபுதேவா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.