‘ஜெயம் கொண்டான்’, ‘இவன் தந்திரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ரதன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். நதி நீர் இணைப்பு உள்ளிட்ட சமூக பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச்.8ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், பூமராங் படத்தின் குழுவினர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
இந்த படத்தின் கதையை கேட்ட ரஜினிகாந்த், திரைப்படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், குறைந்தப்டசம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
நதி நீர் இணைப்புக்காக அரசு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் ஆதரவளிக்கவும், ரூ.1 கோடி நன்கொடை வழங்கவும் தயார் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.