அக்யூஸ்ட் நம்பர்.1- ஆக நடிக்கும் சந்தானம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தில்லுக்குதுட்டு 2’ திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் A1 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Santhanam's next has been titled as A1 (a) Accused No 1.

ஹாரர் காமெடி திரைப்படமான தில்லுக்குதுட்டு திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்கிறார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் இந்த படத்தை தயாரிக்கிறார். ‘A1-அக்யூஸ்ட் நம்பர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இம்மாதம் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.