நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகியுள்ள ‘பூமராங்’ திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல தனியார் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

‘ஜெயம் கொண்டான்’, ‘இவர்ன் தந்திரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து, இயக்கியுள்ள இப்படத்தில் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ரதன் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். நதி நீர் இணைப்பு உள்ளிட்ட சமூக பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (மார்ச்.8) ரிலீசாகி நல்ல வரவேர்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பூமராங் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.
Boomerang Digital And Satellite Rights Acquired By @ZeeTamil #Boomerang@Atharvaamurali @RJ_Balaji @akash_megha @actorsathish @radhanmusic @Actress_Indhuja @Dir_kannanR @SonyMusicSouth @tridentartsoffl @DoneChannel1 @digitallynow pic.twitter.com/WgJJcJGxM1
— kannan (@Dir_kannanR) March 9, 2019