லேடி சூப்பர்ஸ்டாரை அடுத்து தர்பாரில் இணைந்த பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படத்தின் நாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷூட்டிங்கில் பங்கேற்றதையடுத்து, காமெடி நடிகர் யோகி பாபுவும் இணந்துள்ளார்.

Yogi Babu joined the sets of Super Star Rajinikanth's Darbar

ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘பேட்ட’ திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். தற்போது மும்பையில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை தர்பார் ஷூட்டிங் பணிகளை நடிகை நயன்தாரா தொடங்கினார்.

தற்போது அவரை தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு தர்பார் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். ‘சர்கார்’ திரைப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக யோகிபாபு இப்படத்தில் நடிக்கிறார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.