பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரித்து வரும் ‘காக்டெய்ல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபுவுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த காக்டெய்ல் என்ற பறவை ஒன்று படம் முழுக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

அறிமுக இயக்குநர் முருகன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபுவுடன், சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர் கேரட்கரில் நடிக்கிறார். மேலும், மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன், ரமேஷ், மிதுன் மற்றும் பாலா குரேஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் யோகி பாபுவுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘காக்டெய்ல்’ என்ற பறவை நடிக்கிறது. இத்துடன் முருகன் சிலை ஒன்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு நாய்க்கு முடிவெட்டும் கடை நடத்துகிற வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.
பி.ஜி.முத்தையாவிடம் உதவியாளராக இருந்த ரவீண் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.வி.பிரகாஷிடம் பணிபுரிந்த சாய் பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.