''5 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த ஆர்யாவா இருந்தா...'' - பிரபல இயக்குநர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருள்நிதி நடித்த 'மௌன குரு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்த குமார். இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி வரும் படம் மகாமுனி. இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

Santha Kumar shares his working experience with Arya's Magamuni

மேலும் இந்த படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு தமன்  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் சாந்த குமார் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், கதை எழுதிவிட்டு தான் நான் நடிகரை தேர்வு செய்வேன்.  ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒரு ஸ்கிரீன் இமேஜ் இருக்கும். அது அந்த கேரக்டருக்கு பொருந்துமா என்று பார்ப்பேன். அப்படி வந்தவர் தான் ஆர்யா.

இந்த வேடத்தை செய்வதற்கு மன தைரியம் வேண்டும். ஆர்யா சைக்கிளிங் எல்லாம் செய்துவருகிறார்.அதனால் அவருக்கு மன தைரியம் இருக்கும் என நம்பினேன்.

''5 வருஷத்துக்கு முன்னாடி பார்த்த ஆர்யாவா இருந்தா...'' - பிரபல இயக்குநர் விளக்கம் வீடியோ