அருள்நிதி நடித்த 'மௌனகுரு' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாந்தகுமார். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கும் படம் 'மகாமுனி'.

இந்த படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து ஆர்யாவின் மனைவியும் நடிகையிமான சாயிஷா ட்விட் செய்துள்ளார்.
அதில், மகாமுனி படத்தின் சில ஸ்டில்ஸ்களை பகிர்ந்துள்ளார். பின்னர் ரொம்ப புதுமையான ஆர்யா, ரொம்ப புதுசா இருக்காரு கணவர் ஆர்யா. மகாமுனி படத்துக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.