பேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிருகங்களை வேட்டையாடும் ஆர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மௌன குரு’ இயக்குனர் சாந்தகுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் இயக்கியுள்ள ‘மகாமுனி’ படத்தின் டீசர் இன்று  இணையத்தில் வெளியாகியுள்ளது.

The official teaser of Arya's Magamuni directed by Mounaguru fame Santhakumar

கடந்த 2011ம் ஆண்டு அருள்நிதி, இனியா நடிப்பில்  வெளியான படம் ‘மௌன குரு. இந்தப் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார்.

ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாமுனி‘ படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.   எஸ்.எஸ்  தமன் இசையமைத்துள்ள இப்படத்தில்  ஜுனியர் பாலையா, ஜெய ப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டுள்ளனர். இதில் ஆர்யாவின் நடிப்பு பேசப்படும் விதமாக அமைந்துள்ளது. எனவே இப்படம் நிச்சயம் ஆர்யாவிற்கு ஒரு நல்ல கம்பேக் ஆக அமையும்.

பேராசை, வஞ்சக குணங்களை கொண்ட மிருகங்களை வேட்டையாடும் ஆர்யா வீடியோ