இசைஞானி இளையராஜா தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமனிதன்', மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் 'சைக்கோ' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
![KJ Yesudas speaks about Ilaiyaraaja's Music Concert KJ Yesudas speaks about Ilaiyaraaja's Music Concert](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kj-yesudas-speaks-about-ilaiyaraajas-music-concert-photos-pictures-stills.jpg)
இந்நிலையில், வரும் ஜூன் 2ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்தநால் அன்று, மிக பிரம்மாண்டமாக இசை கச்சேரி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்கள் கலந்துகொண்டு பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடவுள்ளனர். மேலும், இந்த கச்சேரியில் மிகவும் பிரபலமான பாடல்கள் குறித்தும், பின்னணி இசை குறித்து நினைவுகளை இளையராஜா பகிர்ந்துக் கொள்கிறார்.
இம்முறை முதன் முறையாக கிட்டதட்ட 100 இசை கலைஞர்கள் இளையராஜாவுடன் ஒரே மேடையில் ரசிகர்களுக்கு இசை விருந்து அளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் ஆஸ்தான பிரபல பின்னணி பாடகர்களான கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ, உஷா உதுப், பாம்பே ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பாடல்கள் பாடவுள்ளனர். இவர்களுடன் உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து சில சூப்பர்ஹிட் பாடல்களை பாடவிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், இளையராஜா எதற்காக இத பண்ணனும்
ஜீன் 2 இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. இது இசைக் கலைஞர்களின் குடும்பத்துக்கு நல்லவது செய்வதற்காக எனது சகோதரர் இசையராஜா ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார். ரசிகர்கள் இந்த நிகழ்வை நன்றாக நடத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
'எதற்காக இதப் பண்ணனும் ?' - இளையராஜாவின் இசை நிகழ்ச்சி குறித்து பிரபல பாடகர் வீடியோ