'மைக்க அவர் கிட்ட கொடுங்க' - பிக்பாஸ் வீட்டில் 'நீயா ? நானா ?'
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 09:38 AM
பிக்பாஸ் சீசன் 3யில் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பாத்திமா பாபு. அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி, மாற்றி மாற்றி பேசும் மீராவால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் வீட்டில் எழுந்த சலசலப்புகள், பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு மீரா முக்கிய காரணமாக இருந்தார். இடையில் கவின், லாஸ்லியா, சாக்ஷி ஆகியோருக்கு இடையில் முக்கோன ஈகோ பிரச்சனை வேறு ரசிகர்களை சுவாரஸியப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் இடையே நீயா நானா ஸ்டைலில் விவாதம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் நெறியாளராக மீரா செயல்பட்டு அனைவரிடமும் கேள்விகள் கேட்கிறார்.
டாபிக் என்னவென்றால், கிளீனிங் டீம் கடமையுடன் வேலை செய்கிறார்கள் அல்லது பாசாங்கு செய்கிறார்கள் என்பதே. போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து கடுமையாக வாதம் செய்கிறார்கள்.
#Day24 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/xq81cJGDJG
— Vijay Television (@vijaytelevision) July 17, 2019