"இது சரியே இல்ல பிக் பாஸ் ..” - தர்ஷனை வரவேற்ற சனம் ஷெட்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 30, 2019 11:39 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் 98வது நாளில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் போட்டியின் வார இறுதி நாளில் நடைபெற்ற எலிமினேஷனில் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்ற தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோருடன் இறுதிப்போட்டிக்கு செல்லும் ‘கோல்டன் டிக்கெட்’ வாங்கிய முகெனும் இருக்கிறார். கடந்த வாரம் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து கவின் விலகினார்.
இந்நிலையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டு 98 நாட்கள் வரை இருந்துவிட்டு திரும்பிய தர்ஷனை வரவேற்கும் விதமாக நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “'Welcome Back' தர்ஷன் என்று கூற முடியவில்லை. நீ அங்கிருந்து வெற்றி பெற்ரிருக்க வேண்டும். ஆனால், நீ மக்களிம் மனதை வென்றுவிட்டாய். நான் சொன்ன போது நீ நம்பவில்லை. இப்போது உனக்கே புரியும் என நினைக்கிறேன். இது மிகவும் மோசமான செயல் பிக் பாஸ். எது எப்படியோ 98 நாட்கள் கழித்து உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.