''மக்களால் போற்றப்படுபவர் Bigg Boss-ஆல் eliminate செய்யப்படுவார்'' - முன்னாள் பிக்பாஸ் பிரபலம் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 29, 2019 11:17 PM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் எவிக்ட் செய்யப்படுவதாக கமல் அறிவித்தார். அதனைக் கேட்ட மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனை கமலிடம் தெரியப்படுத்தினர்.

அதற்கு பதிலளித்த கமல், ''எனக்கும் அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால் இது மக்களின் முடிவு'' என்றார். பின்னர் வெளியே வந்த தர்ஷனிடம் உங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக கமல் அவரை வாழ்த்தினார்.
தர்ஷன் வெளியேறியது குறித்து ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஆகச் சிறந்த உழைப்பை கொடுத்த விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்துக்கு உரியது. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர் அவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை'' என்றார்.
மேலும் பிரபல நடிகையும் , பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளருமான நடிகை ஹாரத்தி, ''ரொம்ப கொண்டாடும் போதே நினைத்தேன் மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸால் எலிமினேட் செய்யப்படுவார்கள். கண்டிப்பாக நீங்கள் தான் வெற்றியாளர் சகோதரா, நீங்கள் உங்கள் நாட்டின் பெருமை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன்.....மக்களால் போற்றப்படுபவர்கள் #BiggBossTamil ஆல் eliminate செய்யப்படுவார்😥
Definitely you are winner #Tharshan My dear brother
You are #Pride of your #nation#jaffna #SriLanka
— Actress Harathi (@harathi_hahaha) September 29, 2019