Asuran others
Kaapaan India

''நான் உங்கள ஃபிரெண்டா தான பார்க்குறேன்?'' - சாண்டியை கலாய்த்த கமல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஷயம் கவின்  நிகழ்ச்சியைவிட்டு திடீரென வெளியேறியது தான். கவின் வெளியேறிய விவகாரம் சமூக வலைதளங்களில் மிகவும் விவாதிக்கப்பட்டது. 

Losliya, Sandy, Tharshan's Bigg Boss 3 Promo 4 September 29

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் (செப்டம்பர் 29) கவின், கமலுடன் மேடையில் தோன்றி தான் வெளியேறியதன் காரணத்தை கூறினார். குறிப்பாக லாஸ்லியாவிற்காகத் தான் அத்தகைய முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் அகம் டிவி வழியாக மற்ற போட்டியாளர்களிடம் உரையாடினார். அப்போது மீதமிருக்கும் நாட்களில் நன்றாக விளையாடி விட்டு வருமாறு போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறினார். 

இந்நிலையில் இன்றைய தினம் வெளியேறும் போட்டியாளர்களை கமல் அறிவிப்பார் என்பதால் இன்றைய நிகழ்ச்சியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான நான்காவது புரோமோவில், கமலிடம் லாஸ்லியா, சாண்டி உங்களுக்கு சமைத்து தர வேண்டுகோள் விடுத்தார் என போட்டுக்கொடுத்தார். அதற்கு கமல் சாண்டியை பார்த்து நக்கலாக நான் உங்கள ஃபிரெண்டாக தான் பார்க்குறேன் என்றார். 

''நான் உங்கள ஃபிரெண்டா தான பார்க்குறேன்?'' - சாண்டியை கலாய்த்த கமல் வீடியோ