விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' எப்போ ரிலீஸ் தெரியுமா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 30, 2019 11:10 AM
விஜயா புரொடக்ஷன் சார்பாக பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் சங்கத் தமிழன். வாலு, ஸ்கெட்ச் படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
![Vijay Sethupathi's Sangathamizhan will be released on October 11 Vijay Sethupathi's Sangathamizhan will be released on October 11](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-sethupathis-sangathamizhan-will-be-released-on-october-11-photos-pictures-stills.png)
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்ற கமலா பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இந்த படம் வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.