இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவரா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 29, 2019 10:09 PM
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறினார். மீதமுள்ளவர்களில் முகேன் தவிர சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய நான்கு பேர் எலிமினேஷனுக்காக நாமினேஷனில் இருந்தனர்.

நான்கு பேரும் வலிமையான போட்டியாளர்கள் என்பதால் இந்த வாரம் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டது. நேற்றைய தினம் கமல் சாண்டியை காப்பாற்றினார்.
மீதமுள்ள மூவரில் மூன்று பேரில் யார் இறுதிப் போட்டிக்கு செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 29) தர்ஷன் வெளியேறுவார் என்று கமல் அறிவித்தார். அதனைக் கேட்ட சாண்டி உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.க
ஷெரின் உள்ளிட்டோர், ''எங்களால் இதனை நம்ப முடியவில்லை'' என்றனர். அதற்கு பதலளித்த கமல், எனக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் இது மக்களின் முடிவு'' என்றார்.