பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அந்த போட்டியாளர்?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 29, 2019 02:35 PM
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் எனும் விவரம் தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் பைனல்ஸ் நடக்க உள்ளது. சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா, ஷெரின் ஆகிய ஐந்து பேர் தான் இப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இவர்களில் முகென் கோல்டன் டிக்கெட் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிட்டார். இதனால் மீதியிருக்கும் நான்கு பேரில் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் தொற்றிக் கொண்டுள்ளது. முகெனுடன் சேர்த்து பைனலுக்கு போகும் அந்த நான்கு போட்டியாளர்கள் யார் எனும் பேச்சு தான் ஊரெங்கும் கேட்கிறது.
சாண்டி, தர்ஷன், லாஸ்லியா, ஷெரின் இடையே கடுமையான போட்டி நலவியது. இதில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.