பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறியவுடன் தர்ஷன் உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 30, 2019 10:29 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 98 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷன் வெளியேறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பிக் பாஸ் போட்டியில் கடந்த வாரம் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து கவின் விலகினார். அவரைத் தொடர்ந்து வார இறுதி நாளில் நடைபெற்ற எலிமினேஷனில் மற்ற போட்டியாளர்களை விட குறைவான வாக்குகளை பெற்ற தர்ஷன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் ஐவர் அணி என்றழைக்கப்படும் கூட்டணியில் இருந்து தர்ஷன் வெளியேறியது, பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமல்லாது மக்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்டு 98 நாட்கள் வரை தன்னை ஆதறித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தர்ஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “தெரிந்தவர்களின் அன்பை பெறுவது நல்ல உணர்வு, ஆனால் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து அன்பை பெறும் உணர்வை வார்த்தைகளால் கூற முடியவில்லை. இன்று என் வாழ்வில் சிறந்த நாள், முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து கிடைத்த அன்பு, ஆறுதல், அரவணைப்பை உணர்ந்தேன். இது தான் சிறந்த பரிசு.. இதற்காக பிக் பாஸ் 3-க்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொருவரும் என்னை உங்களது குடும்பமாக நினைத்து இந்த 98 நாட்களும் என்னை ஆதரித்திருக்கிறீர்கள். விரைவில் சந்திக்கிறேன். அதுவரை என்னை பொறுத்துக் கொள்ளுங்கள்..” என பகிர்ந்துள்ளார்.