www.garudabazaar.com

JACKPOT! விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா... செம குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தாலும், தற்போது தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருந்தார் சம்யுக்தா. 50 நாட்கள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

Samyuktha joins vijay sethupathi film விஜய் சேதுபதியுடன் நடிக்கும் சம்யுக்தா

இந்நிலையில் ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொல்லலாம். அவர் மாடலிங் துறையில் இருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திர நந்தினி என்ற தொடரில் நடித்து இருக்கிறார். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அந்த சீரியல் நிறுத்தப்பட்டது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவர் விஜய் சேதுபதியுடன்  நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்திலிருந்து அதீதி ராவ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தகவல் என்னவென்றால் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா விஜய்சேதுபதியின் 'துக்ளக்' படத்தில் இணைந்துள்ளார். அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

JACKPOT! விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா... செம குஷியில் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samyuktha joins vijay sethupathi film விஜய் சேதுபதியுடன் நடிக்கும் சம்யுக்தா

People looking for online information on Biggboss4tamil, Samyuktha will find this news story useful.