www.garudabazaar.com

"அந்த மாதிரியான வார்த்தைகள் எப்படி Use பண்ணலாம்"... வைரலாகும் சனம் Throwback பேட்டி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

sanam throwback interview goes viral after eviction

இந்நிலையில் சனம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைவதற்கு முன்பு நமது Behindwoods சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் தனக்கு தர்ஷனால் ஏற்பட்ட மன முறிவு பற்றியும் அவர் பேசியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த பலரும் சனம் எப்படி பிக்பாஸுக்கு முன்பு இருந்தாரோ அப்படியேதான் பிக்பாஸ் வீட்டிலும் பேசியிருக்கிறார். அவர் உண்மையிலேயே நேர்மையான பெண் என்று ஒரு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்தப் பேட்டியில் அவர் தர்ஷன் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும் பொழுது "என்னை வேண்டாம் என்று சொன்னது கூட பரவாயில்லை, ஒரு உறவுக்கு முக்கியமே நம்பிக்கைதான், அதிலே அவர் சந்தேகப்பட்டது தான் என்னால் தாங்க முடியவில்லை. பின்பு என்னை மிரட்டுவது மற்றும் அவமானப்படுத்துவது போன்ற செயலில் இறங்கியதான் வேறு வழியே இல்லாமல் அவரை பற்றி புகார் தெரிவித்தேன். ஒரு வளரும் நடிகைக்கு இதனால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் எனக்கு தெரியும். ஆனால் எனது குடும்பத்தை அது பாதிக்கும் போது எனக்கு வேறு வழியில்லை" என்று கூறியுள்ளார்.

"அந்த மாதிரியான வார்த்தைகள் எப்படி USE பண்ணலாம்"... வைரலாகும் சனம் THROWBACK பேட்டி...! வீடியோ

sanam throwback interview goes viral after eviction

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.