'அர்ஜூன் ரெட்டி'யில் விஜய் தேவரகொண்டாவின் நண்பராக தனது யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்த்தவர் ராகுல் ராமகிருஷ்ணா. பின்பு 'கீதா கோவிந்தம்', 'அல வைக்குந்தபுரமுலோ' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''நான் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இதற்கு மேல் என் துக்கத்தை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.
உங்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களுக்கு எதாவது மாற்றம் தென்பட்டால் சற்று கவனியுங்கள். அவர்கள் நிகழ்ந்ததை வெளியில் சொல்வதற்கு போதுமான ஆற்றல் இருக்காது''. என்று குறிப்பிட்டுள்ளார்.
I was raped during childhood.
I don’t know what else to say about my grief, except for this, because this is what I seek to know about myself.
— Rahul Ramakrishna (@eyrahul) January 20, 2020