மாநாடு சிம்புவின் க்யூட் லுக் இது... ஆமா, இதுல யார் குழந்தை..? Check this out.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிம்பு தனது புதிய லுக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சிம்பு என்கிற எஸ்.டி.ஆர். தனது தந்தை டி.ராஜேந்திர் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் சிம்புவின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு குழந்தையை கையில் ஏந்தியபடி சிம்பு வெளியிட்டிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவதிப்பட்டு வந்த சிம்பு, இப்போது மீண்டும் உடல் இளைத்து சிக்கென்று ஆகியிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அறித்துள்ளது.