ஜானுவுக்காக களமிறங்கிய சமந்தா - ஸ்பெஷலான புடவையில் இருக்கும் வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் '96'. இந்த படம் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் முதன்மை  நடித்துள்ளனர்.

Samantha wears Sharwanand' Jaanu saree Goes Viral

இந்த படத்தில் குட்டி ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடித்துள்ளார். பிரேம் குமார் இயக்கும் இந்த படத்துக்கும் கோவிந்த் வசந்தாவே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் கடந்த பிப்ரவரி 7 திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை சமந்தா ஜானு என எழுதியிருக்கும் புடவை அணிந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Entertainment sub editor