நடிகர் ஆதித்யா பாஸ்கர் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போட்டோவுக்கு நடிகை கௌரி கிஷன் கமன்ட் அடித்துள்ளார்.

ப்ரேம் குமார் இயக்கத்தில் தமிழில் வெளியான திரைப்படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த இந்த காதல் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 90-களில் இருந்த பள்ளி காதலையும், பல வருடங்கள் கழித்து அவர்கள் சந்திக்கும் இரவையும் அழகாக காட்சிப்படுத்தி இத்திரைப்படம் உருவானது. இதையடுத்து 96 படத்தை ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியாகியுள்ளது. ஷர்வானந்த் சமந்தா இதில் ஜோடி சேர்ந்து நடித்தனர். தமிழில் த்ரிஷாவின் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் நடித்த கௌரி கிஷனே தெலுங்கிலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கர், இயக்குநர் ப்ரேம் குமாருடன் இணைந்து ஜானு படத்தை பார்த்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அதற்கு கௌரி கிஷன், ' ஆதிம்மா, ஒவ்வொரு நாள் ஷூட்டிங் செட்டிலும் உன்னை நினைத்து பார்க்காத நாள் இல்லை' என கமன்ட் பதிவிட்டுள்ளார்.