சமந்தாவை வெறித்தனமாக வழிபடும் ரசிகை... ஶ்ரீ ராம ஜெயத்திற்கு டஃப் காம்படீஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'ஜானு'. இத்திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கையில், சமந்தாவின் ரசிகை ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

samantha replies to a fangirl who does a crazy thing

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இத்திரைப்படத்தை பல்வேறு மொழிகளில் ரிமேக் செய்தனர். தெலுங்கில் ஷர்வானந்த், சமந்தா ஜோடியாக நடிக்க, 96 படத்தை இயக்கிய ப்ரேம் குமார் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் டீசர் காட்சி வெளியாகி, இணையத்தில் ஹிட் அடித்தது. மேலும் 'ஊஹலே' எனும் பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில் சமந்தாவின் ரசிகை ஒருவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நோட்டு புக் முழுவதும், i love you sam, jaanu என பல்வேறு முறை எழுதியிருக்கிறார். கடவுள் பக்தி இருப்பவர்கள், ஶ்ரீ ராம ஜெயம் என நோட்டில் எழுதுவதை போல, சமந்தாவின் ரசிகை எழுதியிருப்பதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதை எழுதி முடிக்க மூன்று மணி நேரம் ஆனதாகவும், இதற்காக தன் அம்மாவிடம் திட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த சமந்தா, என் மீது உன் அம்மா கடும் கோபத்தில் இருப்பார், உன் அன்புக்கு நன்றி, அப்படியே படிப்பிலும் கவனம் செலுத்தவும் என பதிவிட்டிருக்கிறார்.

சமந்தாவே தனது பதிவுக்கு ரிப்ளை செய்திருப்பதால், ரசிகை உற்சாகத்தில் துள்ளி குதிக்க போவது உறுதி.

Entertainment sub editor