விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2018 ஆம் வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் '96'. இந்த படம் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் முதன்மை நடித்துள்ளனர்.

இந்த படத்தில் குட்டி ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடித்துள்ளார். பிரேம் குமார் இயக்கும் இந்த படத்துக்கும் கோவிந்த் வசந்தாவே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் நாளை (பிப்ரவரி 7) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்து நிகழ்வு ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ, ''நான் பிரபாஸிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
நாங்கள் ஜானு என்கிற தலைப்பை முடிவு செய்த போது, அவர் 'ஜான்' (Jaan) என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வந்தார். நாங்கள் யுவி கிரியேஷன்ஸை அழைத்து அனுமதி கேட்ட போது அவர்கள் அனுமதியளித்தனர். இதனால் நான் பிரபாஸிற்கு மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.