திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்கும் ’96’ படத்தின் தெலுக்கு ரீமேக் ’ஜானு’ படத்தின் டிரெயிலர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து கடந்த 2018 ஆம் வருடம் வெளியான '96' படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

Vijay Sethupathi Trisha Sharwanand Samantha 96 Telugu remake Janu trailer is out

மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்திருந்தது. மகேந்திரன் ஜெயாஜூ மற்றும் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். பள்ளிப் பருவ காதலை பேசிய இந்த படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் 'ஜானு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஷர்வானந்த் மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர். குட்டி ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசரும் சில பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகி உள்ளது.

திரிஷா வேடத்தில் சமந்தா நடிக்கும் ’96’ படத்தின் தெலுக்கு ரீமேக் ’ஜானு’ படத்தின் டிரெயிலர்...! வீடியோ

Entertainment sub editor