என் பொழுதுபோக்கு என்னவென்று கண்டுபிடித்தேன் - பிரபல நடிகை ஓபன் ஸ்டேட்மெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா தொற்று பரவுதல் பிரச்சனையால் ஊரடங்கு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் எப்போது இதற்கு முடிவு வரும் என்று காத்திருக்கின்றனர். வழக்கம் போல திரைப் பிரபலங்கள் தங்கள் சோஷியல் மீடியா தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள்.

Samantha shares an instagram post that roof garden is her hobby

சமீபத்தில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்தார். தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி செடிகளை வளர்த்து வருகிறார் சமந்தா. ஒரு ஃபோட்டோவை பதிவிட்டு அதற்கு கேப்ஷனக அவர் குறிப்பிட்டது, ‘இதற்கு முன்னால் மக்கள் என்னுடைய பொழுதுபோக்கு என்னவென்று கேட்டபோதெல்லாம் சினிமா என்றுதான் சொல்லி வருவேன். அது உங்கள் தொழில். பொழுதுபோக்கு என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்கும்போது பதில் சொல்ல முடியாமல் திணறினேன்.

ஆனால் இப்போது என்னுடைய பொழுதுபோக்கு என்னவென்று கண்டு பிடித்துவிட்டேன். என் வீட்டிலேயே மாடியில் காய்கறி செடிகளை வளர்ப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு’ என்று பதிவிட்டுள்ளார் சமந்தா

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha shares an instagram post that roof garden is her hobby

People looking for online information on Lockdown, Samantha will find this news story useful.