www.garudabazaar.com

Samantha : கைகளில் காயத்துடன் சமந்தா பகிர்ந்த ஃபோட்டோ.. என்ன ஆச்சு? பரபரப்பில் ரசிகர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரலாகி வருகிறது.

Samantha Ruth Prabhu Shared Her Injured Hand Picture

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "சாமி தரிசனம் செய்த கோயில் பிரசாதத்தை விஜய்க்கு கொடுப்பீங்களா?".. S.A. சந்திரசேகர் நச் பதில்.

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்.

ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

Samantha Ruth Prabhu Shared Her Injured Hand Picture

Images are subject to © copyright to their respective owners.

நடிகை சமந்தா நடித்த யசோதா படம் தெலுங்கில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலம்” திரைப்படம்  வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Ruth Prabhu Shared Her Injured Hand Picture

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Samantha Ruth Prabhu Shared Her Injured Hand Picture

Images are subject to © copyright to their respective owners.

சமந்தா, தெலுங்கில்  'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் சமந்தா நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு கைகளிலும் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "இது ஆக்சன் காட்சிகளுக்கான வெகுமதி" என பதிவிட்டுள்ளார். சண்டைக் காட்சி படப்பிடிப்பில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் எந்த படத்தின் படப்பிடிப்பு என சமந்தா அறிவிக்கவில்லை.

Also Read | தென் தமிழகத்தில் உள்ள விவேக்கின் பூர்வீக வீடு.. பிரபல கல்வெட்டு ஆய்வாளர் வெளியிட்ட PHOTOS!

Tags : Samantha

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Shared Her Injured Hand Picture

People looking for online information on Samantha will find this news story useful.