www.garudabazaar.com

இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Samantha Ruth Prabhu Boxing Practice Photo goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரஜினி வீட்டில் "ஆன்மிக குரு ரவி ஷங்கர்".. விருந்தளித்து உபசரித்த லதா ரஜினிகாந்த்!

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌. விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார். 

சமீபத்தில் நடிகை சமந்தா பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். படிக்கட்டுகளில் ஏறி சூடம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்.

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Ruth Prabhu Boxing Practice Photo goes viral

Images are subject to © copyright to their respective owners.

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

சமந்தா, தெலுங்கில்  'குஷி' படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை சமந்தா பதிவிட்டுள்ளார். அதில், "இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்" என பதிவிட்டு தான் பாக்ஸிங் கற்றுக் கொண்டு வரும் புகைப்படத்தை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் 1 மில்லியன் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. நடிகைகள் மிருணாள் தாகூர் & பார்வதி திருவொத்து ஆகியோர் இந்த புகைப்படத்தை முறையே Best, 🔥🔥🔥 என கமெண்ட் செய்து பாராட்டியுள்ளனர்.

Also Read | காதலரை முதல் முறையாக அறிமுகம் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. இவர் தானா? செம்ம ஃபேமஸ் ஆச்சே!

இது 'சம்மு பரம்பரை' 😍.. மிரட்டல் லுக்கில் பாக்ஸிங் கத்துக்கும் நடிகை சமந்தா..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Boxing Practice Photo goes viral

People looking for online information on Samantha, Samantha Boxing Practice Photo, Samantha ruth prabhu will find this news story useful.