www.garudabazaar.com
iTechUS

Autoimmune Diet-ஆ..?? சமந்தா வெளியிட்ட வெறித்தனமான Workout வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்‌.

Samantha Ruth Prabhu Latest Gym Workout Session

Also Read | ஷாருக், தீபிகா படுகோனே நடித்த பதான்... படம் பார்த்த பிறகு ஹிருத்திக் ரோஷன் சொன்ன கமெண்ட்..!!

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

Samantha Ruth Prabhu Latest Gym Workout Session

சமீபத்தில் நடிகை சமந்தா நடித்த யசோதா படம் கடந்த ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி வெளியானது. வாடகைத் தாயாக நடிகை சமந்தா இந்த படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்க “சகுந்தலம்” திரைப்படம்  உருவாகி வருகிறது. பான் இந்திய படமாக உருவாகும் இந்த படம் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது.

Samantha Ruth Prabhu Latest Gym Workout Session

சகுந்தலம் திரைப்படத்தை இயக்குனர் குணசேகர் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் மணிசர்மா இப்படத்திற்கு இசையமைக்கிறார். Gunaa DRP - Teamworks சார்பில் நீலிமா குணா,  இப்படத்தை தயாரிக்கிறார்.  வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, சகுந்தலம் படத்தை வழங்குகிறார்.

இந்த படத்தில் மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜீனின் மகள் அல்லு அர்ஹா  இந்த படத்தில் அறிமுகமாக உள்ளார்.

Samantha Ruth Prabhu Latest Gym Workout Session

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு, "முடிந்தவரை கண்டிப்பான டயட்டில் இருப்பது (ஆட்டோ இம்யூன் டயட்.. ஆம் அப்படி ஒன்று இருக்கிறது) எனக்குக் கற்றுக் கொடுத்தது, வலிமை என்பது நீங்கள் சாப்பிடும் உணவைச் சார்ந்தது அல்ல.. அது எண்ணத்தை சார்ந்தது" என சமந்தா பதிவிட்டுள்ளார்.

Also Read | "இவங்களுக்கு நம்ம கொடுக்கப்போற தண்டனை".. விஜய்சேதுபதி 'விடுதலை' டப்பிங் GLIMPSE வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Latest Gym Workout Session

People looking for online information on Samantha ruth prabhu, Samantha Ruth Prabhu Latest Gym Workout will find this news story useful.