Athiya Shetty : திருமண தருணங்களை பகிர்ந்த அதியா ஷெட்டி.. முதல் ஆளாக சமந்தா போட்ட கமெண்ட்..! 😍
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சுனில் செட்டியின் மகளும், நடிகையுமான் அதியா ஷெட்டியுடன் கே எல் ராகுலுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
முன்னதாக, ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் காதலித்து வருவது பற்றி அவர்களே சில சமூக வலைத்தள பதிவில் அதிகாரபூர்வமாக குறிப்பிட்டிருந்தனர். இதனிடையே அவர்கள் அவுட்டிங் போன ஃபோட்டோக்களையும் அவர்களே அவ்வப்போது பதிவிட்டு வந்தனர்.
இதற்கு மத்தியில், கடந்த சில மாதங்களாக கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமணம் நடைபெறும் என்ற கருத்தும் பரவலாக இருந்து வந்தது. இதற்கு சுனில் ஷெட்டி கூட விரைவில் திருமணம் நடைபெறும் என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கையில், நியூசிலாந்து தொடரில் இருந்து கே எல் ராகுல் விலகியது அவருடைய திருமணத்திற்காக தான் என்றும் தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில், கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்தது உறுதியாகி உள்ளது. அதே போல, பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் தனது ட்விட்டர் பக்கத்தில் கே எல் ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இது தவிர சில கிரிக்கெட் பிரபலங்களும் ராகுல் திருமணத்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை அதியா ஷெட்டி பகிர்ந்துள்ளார். திருமண கோலத்தில் கே எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இதில் இடம்பெற்றுள்ள நிலையில், திருமணம் குறித்த எமோஷனல் கருத்துக்களையும் தனது கேப்ஷனில் அதியா ஷெட்டி குறிப்பிட்டுள்ளார். அதன்படி கே எல் ராகுல் - அதியா ஷெட்டி திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் தொடர்பான நிகழ்வுகளில் நடந்த நெகழ்வான தருணங்கள் அடங்கிய புகைப்படங்களை அதியா ஷெட்டி தம்முடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதற்கு முதல் ஆளாய் நடிகை சமந்தா வாழ்த்துக்கள் என்று முதல் கமெண்டில் தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படங்களும் சமந்தாவின் கமெண்ட்டும் தற்போது வைரலாகி வருகிறது.