96 தெலுங்கு ரீமேக்கிற்குத் தயாராகும் சமந்தா! போட்டோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரேம்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் தமிழில் வெளிவந்த '96' படம் பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது.

Samantha Preparing For His Next Film Telugu Remake Of 96

தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கினார் தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு.தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமாகி நடைபெற்றது. பின்னர் சர்வானந்த் ஒரு விபத்தில் சிக்கி ஆபரேஷன் செய்யும் அளவிற்கு பாதிப்புக்குள்ளானார். அதனால், படப்பிடிப்பு தள்ளிப் போனது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாம். அதில் படத்தின் நாயகி சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க உள்ளார்கள். தற்போது படத்தின் கதையை சமந்தா படித்து வருகிறாராம். அதில் உள்ள நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடிக்கும் ஆசை சமந்தாவிற்கு இருக்கிறதாம். தமிழில் த்ரிஷா நடித்த அளவிற்கு நடித்துப் பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாம்.

Tags : Samantha, 96