சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீசுக்கு பிரம்மாண்ட கட்-அவுட்களை வைத்து அவர்களது ரசிகர்கள் மாஸ் காட்டுவது வழக்கம்.

தற்போது அந்த வரிசையில் பிரபல நடிகை சமந்தாவுக்கு அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்டை வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளனர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கும் ஹீரோயின்களின் வரிசையில் சமந்தாவுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்களை வைத்து அவரது ரசிகர்கள் கெத்து காட்டியுள்ளனர்.
இதற்கு நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஷாக் ஆயிட்டேன். இதுபோதும் எனக்கு’ என ட்வீட் செய்து ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ திரைப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதில் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும், இளம் தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.
மேலும், நாக சௌர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
Shocked 😊 https://t.co/v07BQwDgKA
— Baby Akkineni (@Samanthaprabhu2) July 3, 2019