சூப்பர் ஸ்டார் ஹீரோயினுடன் இணையும் விமல் விவரம் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.

Shriya Saran-Vimal Wrap Shoot For ‘Sandakaari, My Boss’

அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். பிரபு , சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர்,  உமா பத்மநாபன் மற்றும் பலர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான மாவீரன் படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ஒளிப்பதிவு - குருதேவ், இசை - அம்ரீஷ், பாடல்கள் - கபிலன் விவேக், எடிட்டிங் - தினேஷ், கலை- அய்யப்பன், நடனம் - அபீப், ஸ்டண்ட் - கனல் கண்ணன், திரைக்கதை, இயக்கம்- ஆர்.மாதேஷ். இவர், விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட், விஜய்காந்த்  நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

இது வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம். முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது என இயக்குனர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.