விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘96’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது.

தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு ரீமேக் படத்தையும் இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ராமாக நடிகர் ஷர்வானந்தும், ஜானுவாக சமந்தாவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கின் போது எதிர்ப்பாராத விதமாக நடிகர் ஷர்வானந்த் விபத்தில் சிக்கினார். தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஷூட்டிங்கில் பாராசூட் உதவியுடன் ஸ்கை டைவிங் காட்சி படமாக்கப்பட்டபோது, பாராசூட் பழுதானதால் தவறி விழந்த, நடிகர் ஷர்வானந்திற்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷர்வானந்திற்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ஷர்வானந்த் தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும், 2 மாதம் பெட் ரெஸ்ட் தேவை எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், நடிகர் ஷர்வானந்த், ‘96’ படத்தின் ரீமேக் ஷூட்டிங்கில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கலந்துக் கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.