தெலுங்கில் நடிகை சமந்தா நடித்துள்ள ‘ஓ பேபி’ திரைப்படம் பெண்ணியம் சார்ந்த திரைப்படம் என்று நிலவி வரும் கருத்துக்கு நடிகை சமந்தா பதில் அளித்துள்ளார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள ‘ஓ பேபி’ திரைப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், நடிகை சமந்தா இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இப்படம் பெண்ணியம் சார்ந்த கதையம்சத்தில் உருவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இது குடும்பத்தில் உள்ள 70 வயது பெண்ணை சுற்றிய கதை என்றும், இதில் குடும்பத்தில் உள்ள ஆண்-பெண் என அனைவரின் பங்களிப்பும் இருக்கும் என்று சமந்தா கூறியிருந்தார்.
இதனிடையே, ட்விட்டர் பயணாளி ஒருவர், பெண்ணியம் பேசும் அனைவரும் ஒரே படத்தில் இருந்தால் அது படுதோல்வி படம் தான் என ட்வீட் செய்துள்ளார். இதற்கு நச்சென்று பதில் கூறிய சமந்தா.. ‘சிரித்துக் கொண்டே..நன்றி.. உலகமே இந்த முட்டாளை பாரு.. முட்டாளே இது தான் உலகம்’ என ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு வெளியான ‘மிஸ் கிரானி’ என்ற கொரியன் திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் ரீமேக்காகி நல்ல வரவேற்பை பெற்றது. போட்டோ ஸ்டூடியோவுக்குச் செல்லும் வயதான பெண், மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணின் தோற்றத்தை பெறுகிறார். அதன் பின் அவருக்கு ஏற்படும் சிக்கல்களை நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாகக் கூறும் விதத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
இதில் வயதான தோற்றத்தில் நடிகை லட்சுமியும், இளம் தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். மேலும், நாக சௌர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார். ‘ஓ பேபி’ திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தின் மூலம் சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகி சின்மயி சமந்தாவுக்காக டப்பிங் பேசியுள்ளார்.
Ha ha ha ... Thankyou .. world meet idiot .. idiot meet world .. https://t.co/rCprsZyx5L
— Baby Akkineni (@Samanthaprabhu2) June 19, 2019